தற்போது திருமணங்கள் வெறும் மந்திரங்கள், மாலை மாற்றங்கள் மட்டுமல்ல. ஃபுல்லா ரீல்ஸ், கேமரா கோணங்கள், மீம்ஸ்ஸாக தான் இருக்கிறது. அப்படி ஒன்று, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலாகிருக்கும் ஒரு வீடியோ, மணமகள் கல்யாண மேடையில் கராத்தே காட்டும் சண்டைப் போட்டியாய் மாறிவிட்டது. @cinematographer\_mubu என்ற பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவுக்கு இதுவரை 2 கோடிக்கு மேல் பார்வையாளர்கள் வந்துள்ளார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mubu Mubarak (@cinematographer_mubu)

வீடியோவில், மேடையில் நின்ற மணமகளிடம் ஒரு நண்பர் காமெடியாக தள்ளுகிறார். ஆனால், அடுத்த நொடியிலேயே மணமகள் அதை தடுத்து கராத்தே ஸ்டைலில் அவரை கீழே தள்ளுகிறார். இதை பார்த்த வரவிருந்தோர்கள் அதிர்ச்சியுடன் சிரித்து கொண்டிருக்க, மணமகனோ ஓரமாக நின்று, சிரிப்பை அடக்க முடியாமல் கைகட்டி நின்றிருந்தார்.

இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது “மாமியாருக்கும் ஒரு டிரெயினிங் கிடையாது போல!” என ஒருவர் பதிவிட்டிருந்தார், “இப்பவே மணமகனுக்கு ‘ட்ரெயிலர்’ காட்டிட்டாங்க!” என இன்னொருவர் கமெண்ட் போட்டிருக்கிறார். “இனி மாப்பிள்ளை ஒவ்வொரு வார்த்தையையும் சிந்திச்சு பேசணும்!” எனும் கருத்தும் வைரலாகி வருகிறது.