சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆச்சரியமான மற்றும் வேடிக்கையான “ஜுகாட்” எனப்படும் தற்காலிகத் தீர்வுகளைக் கொண்ட வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு வீடியோ இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது. அதில், பழுதாகி நின்ற ஒரு பெரிய பேருந்தை, மிகச் சிறிய டிராக்டர் ஒன்று கயிறு கட்டி அசால்ட்டாக இழுத்துச் செல்கிறது.
மேலும் வழக்கமாகப் பேருந்துகள் போன்ற கனரக வாகனங்களை இழுக்க பெரிய கிரேன் அல்லது லாரிகள் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த வினோதமான காட்சியைப் பார்த்த மக்கள் “இது என்னப்பா புதுவிதமான இன்ஜினியரிங்?” என்று வியப்புடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பேருந்தின் எடையை ஒரு சிறிய டிராக்டர் தாங்குவது சாத்தியமா என்று ஒருபுறம் ஆச்சரியப்பட்டாலும், மறுபுறம் பாதுகாப்பற்ற முறையில் பேருந்தை இழுத்துச் செல்வது குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் “இந்தியர்களின் அறிவுக்கு எல்லையே இல்லை” என்றும் “தலைவிதியைத் தான் மாற்ற முடியாது, ஆனால் எந்திரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்” என்றும் மக்கள் கிண்டலாகக் கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
