சமூக வலைதளங்களில் ஒரு முதியவரின் சாகச வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு லாரியைத் துரத்திச் செல்லும் அந்த முதியவர், மிகவும் லாவகமாக அதன் பின்னால் ஓடிச் சென்று தொற்றிக் கொள்கிறார். பார்ப்பதற்கே உடல் சிலிர்க்க வைக்கும் இந்தச் செயல், அந்த வயதிலும் அவரிடம் இருக்கும் வேகத்தையும் துணிச்சலையும் காட்டுகிறது.

இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களை ஒரு நிமிடம் திகைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. லாரியில் ஏறிய பிறகு அவர் செய்த அந்த வினோதமான செயல், தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SAKHT LOG (@sakhtlogg)

“>

இதனால் “வயதானாலும் இந்த வேகம் குறையவில்லை” என்று சிலர் வியந்து பாராட்டினாலும், இது போன்ற ஆபத்தான செயல்கள் உயிருக்கு விபரீதமாக முடியலாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். வைரலாகி வரும் இந்த வீடியோ, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெட்டிசன்களால் பகிரப்பட்டு, கமெண்டுகளைக் குவித்து வருகிறது.