திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழனி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை ஆக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வேகமாக வரக்கூடிய வாகனங்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாக்கும் விதமாக ஸ்டீல் தடுப்புகளும் பாதயாத்திரை பாதை ஓரங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் மீது பின்னால் வரக்கூடிய வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.