தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று UGC உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணிகளை செய்பவர்களின் விவரங்களை வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாற்றத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கின்றதா என்பதை சரி பார்க்கவே இந்த தகவல் கேட்கப்படுவதாக யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.