சமூக வலைதளத்தில் ஒரு காணொளி பரவி, பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த காணொளியில், ஒரு பெண் சூப்பர் மார்க்கெட்டில் வாழைப்பழம் மற்றும் முட்டை பெட்டியை வாங்கி பில் செலுத்த வருகிறார். பில் போடும்போது, அவர் வாங்கிய வாழைப்பழத்தின் தோல்களை உரித்து எறிந்துவிட்டு, “தோலுக்கு பணம் கொடுக்க மாட்டேன்” என்று தைரியமாக சொல்கிறாள். இதை கேட்ட கடை ஊழியர், “தோலுக்கு பணம் தேவையில்லை” என்று சொல்லி, அவள் வாங்கிய முட்டை பெட்டியை திறந்து, முட்டைகளை உடைத்து, உள்ளிருக்கும் பகுதியை மட்டும் வைத்து தோல்களை எறிகிறார்.
இதை பார்த்து பெண், “நான் முட்டையை வேகவைத்து சாப்பிடப் போகிறேன்” என்று வாதிக்க, ஊழியர் தொடர்ந்து முட்டைகளை உடைக்கிறார். ஆத்திரமடைந்த பெண், வாழைப்பழத் தோலை ஊழியரின் முகத்தில் வீசி எறிந்து அங்கிருந்து செல்கிறார். இதற்கு பதிலடியாக ஊழியர் முட்டையை எடுத்து அவள் மீது அடிக்க முயல்கிறார். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் பெரும்பாலும் கடை ஊழியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, பெண்ணின் நடத்தையை தவறு என்று கருதுகின்றனர். இது இப்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
