கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு பள்ளி மாணவனின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், அரசு உத்தரவையும் மீறி வெல்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பு வகுப்புகளை நடத்தி உள்ளது.

இந்த வகுப்பு முடித்துவிட்டு 33 மாணவர்களோடு சென்ற பள்ளி பேருந்து ஓட்டுநருடைய  கட்டுப்பாட்டை இழந்ததில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இதில், 12th படிக்கும் மாணவனின் கை துண்டாகியுள்ளது. மேலும், படுகாயமடைந்த 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.