கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டணத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒண்டிப்புதூர் மற்றும் பட்டணம் பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் தோழிகளான இரண்டு பேரும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய படங்களில் அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதனையடுத்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வருமாறு மதிப்பெண் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதிப்பெண் குறைந்தது தெரிந்தால் பெற்றோர் திட்டுவார்கள் என்ற அச்சத்தில் 2 மாணவிகளும் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் வைத்து குடிநீரில் சானிடைசரை கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த 2 மாணவிகளிடமும் ஆசிரியர்கள் இது பற்றி கேட்டனர். அப்போது மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என அச்சத்தில் சானிடைசரை குடித்து விட்டதாக இருவரும் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இரண்டு பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் தங்களது மகள்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.