உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில், பெண்களை கேலி செய்து தொந்தரவு செய்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
ராம்கோலா பகுதியில், அசலம் மற்றும் ஜூல்ஃபிகார் ஆகிய இருவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே மாணவிகளை கேலி செய்து, அசிங்கமான கருத்துகளை தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த இரண்டு குற்றவாளிகள் இந்து பெண்களை குறிவைத்து, கையில் கயிறு (கலவா) கட்டி, இந்து இளைஞர்களைப் போல் நடித்து, காதல் ஜிஹாத் உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு முறை, பள்ளிக்குள் சென்று மாணவியை தொந்தரவு செய்ததாகவும் தகவல் உள்ளது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சந்தோஷ் மிஸ்ராவின் உத்தரவின் பேரில், ராம்கோலா, கஸ்யா, கட்டா, கப்டன்கஞ்ச் உள்ளிட்ட காவல் நிலையங்களின் காவலர்கள் மற்றும் SWAT குழு இணைந்து, அசலம் மற்றும் ஜூல்ஃபிகார் ஆகிய இருவரை பிடிக்க தீவிர சோதனை நடத்தினர். குசும்ஹா பாலம் அருகே சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இவர்கள், காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட முயன்றனர். பதிலுக்கு காவலர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இருவரின் கால்களிலும் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். பின்னர், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
कुशीनगर में यूपी पुलिस इस वक्त ‘ऑपरेशन मजनू’ चला रही। मतलब स्कूल-कॉलेज के बाहर लड़कियों से बदमाशी करने वालों का ‘इलाज’ किया जाता है।
अब तक 124 मजनुओं का उनकी ‘बीमारी’ के अनुसार इलाज किया है। ये दोनों ‘गंभीर’ वाले थे। pic.twitter.com/lRrePkH3Vi
— Rajesh Sahu (@askrajeshsahu) September 1, 2025
மேலும் இருவரிடமிருந்து 2 சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள், ஒரு பதிவு இல்லாத மோட்டார் சைக்கிள் மற்றும் 1100 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்ட பிறகு, வீல்சேரில் அமர்ந்து, கைகளைப் பிடித்து அழுது, மன்னிப்பு கேட்டனர்.
காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் மிஸ்ரா, பெண்களை தொந்தரவு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்தார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
