பீகார் மாநில அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் அம் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் நியமனம் இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் திருத்தங்கள் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்பிறகு பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ரக்ஷா பந்தன் கூட செய்து உள்ளிட்ட பல பண்டிகைகள் காரணமாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 23 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இப்படி தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதால் வருகைப் பதிவை மிகவும் குறைவாக இருக்கும் எனவும் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பாடத்தை நடத்தி முடிக்க முடியாது எனவும் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பிறகு பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி மாணவர்களுடைய நலன் கருதி பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 11 நாட்கள் மட்டுமே விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.