நம்முடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மின்சாரமும் மாறிவிட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல நேரங்களில் அதற்கு நமக்கு சரியான பதில் கிடைப்பதில்லை. இந்த நிலையில் மத்திய எரிசக்தி துறை மின் நுகர்வோருக்கான உரிமைகள் என்னென்ன என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அரசிடமிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு நுகர்வோர்களுக்கு உரிமைகள் குறித்து மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 176ன்  கீழ்  2020 டிசம்பர் 31 வகுத்த மின்சார விதிகளில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை பெறுவது என்பது மக்களுடைய உரிமை.

மேலும் மின்சாரம் தடை பட்டால் மின்விநியோகம் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறலாம். அது மட்டும் இல்லாமல் மின்விநியோகத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் சேவைகளில் தாமதம் செய்தால் மின் நுகர்வோர்கள் புகார் அளிக்க முடியும். மின் இணைப்பு வழங்குதல், இணைப்பு நிறுத்துதல், மாற்றுதல், கட்டண ரசீது வழங்குதல், வோல்டேஜ் மற்றும் கட்டணம் தொடர்பான புகார்கள் இதில் ஏதாவது காலதாமதம் ஏற்பட்டால் மின் நுகர்வோருக்கு நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து மத்திய எரிசக்தித் துறை இணையதளமான https://powermin.gov.in/ என்பதில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.