மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை  200 குறைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் பொதுமக்களுக்கு கூடுதலாக இரண்டு சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஐந்து கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் மூலமாகவே பயன்படுத்தும் அயர்ன் பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக உபயோக சிலிண்டர்கள் இரண்டிற்கும் ஒரே வடிவில் ரப்பர் குழாய் மற்றும் ரெகுலேட்டர்களை  விற்பனை செய்து வருகிறது.

வணிக உபயோக சிலிண்டரில் கூடுதல் அழுத்தம் காரணமாக இந்த ரப்பர் குழாய் மற்றும் ரெகுலேட்டர் பொருந்தாமல் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டது. இதனால் வணிக சிலிண்டருக்கான  புது ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாயை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் பொதுமக்களுடைய சேவைக்காக சலுகை விலையில் ரப்பர்களை வழங்க இருப்பதாகவும் நிறுவனம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.