ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டைகளில் தனி மனிதனின் அனைத்து விதமான விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற அடையாள ஆவணங்களோடு ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் கார்டின் மூலமாக ஒரு நபரின் அனைத்து விவரங்களையும் அரசு அறிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டிற்கும் மேலானவர்கள் தங்களுடைய ஆதாரத்தை அப்டேட் செய்து கொள்ளுமாறு ஆதார் அணையம் தெரிவித்தது.

முன்னதாக மார்ச் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை ஆதார் விபரங்களை இணையத்தின் மூலமாக இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பலரும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். செப்டம்பர் 14ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு மக்கள் ஆதாரை கட்டணம் செலுத்தி மட்டுமே புதுப்பிக்க முடியும். இதனால் தற்போது வரை ஆதார் விபரங்களை அப்டேட்  செய்யாத மக்கள் தொடர்ந்து இந்த பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.