போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆன்லைன் கட்டண தளமான யுபிஐ, ஒரே மாதத்தில் 10 பில்லியன் பரிவர்த்தனைகளை செய்துள்ளது. ஆகஸ்டில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கை 10.58 பில்லியன். இது 67 சதவீதம் உயர்ந்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் யுபிஐ இன் சாதனை குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த புதிய சாதனை, ஜூலை மாதத்தில் எட்டப்பட்ட ரூ.15.34 லட்சம் கோடி என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. சமீபத்தில் யுபிஐ அமைப்பில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆர்பி பயனர்கள் கடன் கணக்குகளை யுபிஐ உடன் இணைக்க அனுமதித்துள்ளது. இதன் மூலம் மக்கள் கடனை திரும்ப செலுத்தலாம்.