இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனை அனைத்து ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை MyAadhar என்ற போர்டலில் மட்டுமே இலவசமாக செய்ய முடியும். செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் இதனை செய்யாமல் இருந்தால் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு முன்னதாக ஜூன் 14ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 14ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இலவசமாக அப்டேட் செய்யும் வாய்ப்பு நீட்டிக்கப்படாது என்று UIDAI அறிவித்துள்ளது.