நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இனி எஸ் பி ஐ வங்கியின் “eRupee by SBI” என்ற அப்ளிகேஷன் மூலமாக டிஜிட்டல் கரன்சிகளை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் எந்தவிதமான யுபியை அப்ளிகேஷன் அல்லது யுபிஐ க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் கரன்சியை வைத்து pay செய்யலாம். இந்த CBDC மற்றும் UPI இணைப்பு வங்கி துறையின் மிகப்பெரிய பாய்ச்சல் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.