இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனை அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளின் டிகிரி சான்றிதழ்களில் ஆதார் நம்பரை அச்சிடக் கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சில கல்லூரிகளில் டிகிரி சர்டிபிகேட் மற்றும் ப்ரொபஷனல் சர்டிபிகேட்களில் ஆதார் எண்களை அச்சிட்டு வந்தனர். இதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இருக்கும் யுஜிசி சான்றிதழ்களை ஆதார் எண்கள் இல்லாமல் தயார் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.