தமிழகத்தில் ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடைபெறுகின்றது. வீர முத்துவேல் உள்ளிட்டோருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவின் நேரலை இணைப்பு 58 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு whatsapp மூலம் அனுப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மறுவழிப் பரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.