தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வகையான மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள், அதில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக DGP அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.