பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி. அதாவது தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில் இருந்த நபர் இயக்கிய கார் மோதி 4 வயது மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் பலியான 4 வயது சிறுமி!
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில் இருந்த நபர் இயக்கிய கார் மோதி 4 வயது மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால்… pic.twitter.com/JSdaG3OtP5
— Nainar Nagenthran (@NainarBJP) March 25, 2026
திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால், பள்ளியில் இருந்த சிறுமியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதற்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறையினர், வருவாய்த்துறையினர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வராத கொடூரமும் அரங்கேறியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா? அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா?
மொத்தத்தில், பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு நீதியை பெற்று தராமல் வேடிக்கைப் பார்க்கும் அறிவாலயம் அரசு மீண்டுமொரு முறை ஆட்சி அமைப்பதற்கு ஆசைப்படுவதற்கான தகுதியையும் இழந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.
