வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை மாவட்டத்தில் இன்று (நவ. 17) மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்ததால், மாவட்டத்தின் பல பள்ளிக் கட்டட வளாகங்களில் மழைநீர் சூழ்ந்து தேங்கியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இந்த நீர் தேக்கத்தின் காரணமாகவும், நாகை மாவட்ட நிர்வாகம் இன்று அந்த மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அளித்து சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.