தமிழகத் இனி அரசு பள்ளிகளில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுக்கட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி உள்ளிட்ட 20 உறுப்பினர்களை கொண்ட குழுவாக எஸ் எம் சி மாற்றியமைக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி வரும் காலங்களில் மாதந்தோறும் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து கொள்ள வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலமாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.