உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் பயங்கர சாலை விபத்து  நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். பிஜ்னூரில் இருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில் அழைத்து வரும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில்  காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.