பெங்களூரில் உள்ள அமிர்தநகரைச் சேர்ந்த 27 வயது ஊழியரான கோவிந்தராஜு சி என்பவரைப் போலீசார் கைது செய்தனர். இவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தீ மற்றும் பாதுகாப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய 23 வயது மனைவி விவாகரத்து கேட்டதற்காகப் பழிவாங்கும் நோக்கில், தன் மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்து, அவருடைய நண்பர்களையும் டேக் (Tag) செய்துள்ளார்.
திருமணமான பிறகு, கணவர் தன் மனைவியின் சம்பளத்தை ஆன்லைன் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தியதால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, மனைவி ஆந்திராவில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மனைவி சென்றுவிட்ட பிறகும், கணவர் தொலைபேசியில் மிரட்டி, புகைப்படங்களைப் பகிர்வதாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்தார். இதனால் பயந்து மீண்டும் பெங்களூரு வந்த மனைவியிடம், கொலை செய்வதாக மிரட்டினார்.
தொடர்ந்து நடந்த இந்தத் துன்புறுத்தலால், மனைவி விவாகரத்து கேட்டவுடன், ஆத்திரமடைந்த கோவிந்தராஜு, மனைவியின் அந்தரங்கப் படங்களை ‘Threads’ செயலியில் அவருடைய நண்பர்களைக் குறிவைத்து பதிவிட்டார். இதைப் பார்த்த நண்பர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மனைவி போலீசில் புகார் அளிக்க, போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) மற்றும் பாரதீய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.
