புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டிஜேஎஸ் ஜார்ஜ் (97) இன்று பெங்களூருவில் காலமானார். கேரளாவில் பிறந்த இவர், இளங்கலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.
1950ம் ஆண்டு ‘த ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ பத்திரிகையில் பத்திரிகையாளராக தனது பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தனது 93வது வயது வரை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் தலையங்க கட்டுரையாளராக பணியாற்றினார். நையாண்டி மற்றும் கிண்டல் நிறைந்த அவரது எழுத்துகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், அவரது மறைவு பத்திரிகை உலகுக்கு பேரிழப்பாகும்.
