ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் திட்டத்திற்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தேவையற்றது என்றும், இது பிராந்திய அமைதியைக் குலைக்கும் என்றும் அவர் கருதுவதாகத் தெரிகிறது.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு ஈரான் விஷயத்தில் எடுக்கும் அதிரடி முடிவுகளால் அதிருப்தியடைந்த ஜோ கென்ட், தனது பதவியை துறந்திருப்பது வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்களத்தில் ஒரு பக்கம் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் முக்கிய உயர் அதிகாரி ஒருவரே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
