உட்கட்சி பூசலை சமாளிக்க மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி புகாருக்கு ஆளாகியுள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் வயது முதிர்வு, உடல் நலம் பாதிப்பு காரணமாக சில மாவட்ட செயலர்களை மாற்றிவிட்டு 50 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களை மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கவும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவோரை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.