அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, தற்போது அவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தொடக்கத்தில் அரசின் செலவுகளைக் குறைக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஈரான் – இஸ்ரேல் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அவர் எடுத்த முடிவுகள் அமெரிக்கர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, ஈரான் மீதான தாக்குதலால் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்ததோடு, அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டு மக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, டிரம்பின் செல்வாக்கு 40 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல் தேவையற்றது என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, இவ்வளவு குறுகிய காலத்தில் அவரது செல்வாக்கு இவ்வளவு மோசமாகப் பாதிப்படைந்தது இதுவே முதல் முறையாகும்.