அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு சத்தியமங்கலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சிக்குள் நீண்டநாள் பதற்றத்தை ஏற்படுத்திய செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பெரும் வெற்றியாக அமைந்ததாக அவர்கள் கூறினர்.

இதையடுத்து, ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செங்கோட்டையன் நீக்கம், அதிமுக உள்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதனால், வருங்காலத்தில் அதிமுக அரசியலில் புதிய மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

“>