தமிழக தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளே, அமைச்சர் எஸ். கமலி வெளிப்படுத்திய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த ஊழியர் ஒருவரைக் கண்டதும், எவ்வித தயக்கமும் இன்றி ஓடிச் சென்று அந்த ஊழியருக்குத் தேவையான முதலுதவி கிடைக்க வழிவகை செய்தார்.
மேலும் பதவியின் அதிகாரத்தை விட மனித நேயமே முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், அவரே முன்னின்று அந்த ஊழியரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது கோட்டையில் இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் இளம் அமைச்சரான 28 வயதான கமலி, சாமானிய மக்களின் துயரத்தில் நேரடியாகக் களமிறங்கி உதவும் அவரது பண்பு, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், தவெக அரசின் மீது மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ஒரு சக ஊழியரின் உயிர் காக்க விரைந்து செயல்பட்ட அமைச்சரின் இந்தச் செயல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முன்மாதிரியான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
