தமிழக காவல் துறையில் அதிரடியாக ஐ.ஜி மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான உயர் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஜி பி.கே.செந்தில் குமாரி, சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மண்டல விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு எஸ்.பி-யாக இருந்த டாங்கர் பிரவீன் உமேஷ், திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி வி.சியாமளா தேவி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு எஸ்.பி-2 ஆகவும், கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் எஸ்.அசோக்குமார், தென்காசி மாவட்ட எஸ்.பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் ஓசூர் மற்றும் நாகர்கோவில் சப்-டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்டுகளான அக்ஷய் அனில் வகாரே மற்றும் வி.லலித்குமார் ஆகிய இருவரும் எஸ்.பி-யாகப் பதவி உயர்வு பெற்று முறையே திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி-களாகப் பொறுப்பேற்கவுள்ளனர்.
