உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கடந்த 18ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தன்னுடைய 3 வயது சகோதரனுடன் 14 வயது சிறுமி மதியம் 2:00 மணி அளவில் அமர்ந்திருந்தார். அப்போது அக்கம் பக்கத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுவனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த சிறுமியை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது பற்றி சிறுமி தன் தாயிடம் கூறிய நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி ஒரு சிறுவனை போலீசார் கைது செய்த நிலையில் மற்ற அனைவரையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால் மிகவும் வேதனையிலிருந்து சிறுமி சமூகத்தை எதிர்கொள்ள பயந்து இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் முன்னதாக ஒடிசா மாநிலத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி கல்லூரி வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
