கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஃப்ரீடம் நகரில் கிறிஸ்டோபர் (58), மேரி (54) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவரது பக்கத்து வீட்டில் வில்லியம்ஸ் (52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கிறிஸ்டோபருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்ட நிலையில் சம்பவநாளில் இரவு 9:30 மணியளவில் கிறிஸ்டோபரும் அவரது மனைவியும் ஸ்கூட்டியில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வில்லியம்ஸ் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு திடீரென பெட்ரோலை எடுத்து அவர்கள் மீது ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார். அவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் 60 சதவீத தீக்காயங்களுடன் கணவன் மனைவி இருவரும் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் பின்னர் வில்லியம்சை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர்.

அப்போது அவரது அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் காவல்துறையினருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்த நிலையில் அவரது சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஒரு சிறுமியை பட்டப்பகலில் இளைஞர்கள் சிலர் உயிரோடு தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. அந்த சிறுமி பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு  எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.