இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கும் வகையிலான முதலீடு தமிழகத்திற்கு வர இருப்பதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பல்லாயிரக்கணக்கான படித்த இன்ஜினியர்கள் உள்ளனர்.

அந்த பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சம் ஊதியமாக வருடத்திற்கு 8 லட்சத்திற்கு மேல் கொடுக்கும் வேலைவாய்ப்புகளை மகத்தான எண்ணிக்கையில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு கொடுக்கப் போகும் ஒரு புதிய முதலீடு தமிழகத்தை நோக்கி வரப்போகுது. அதைப்பற்றி கூடுதல் தகவலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயமாக அறிவிப்பார்கள்.