
2023- 2024 -ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசு நிதிநிலை அறிக்கை வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமெரிக்க இந்திய கூட்டமைப்பு குழு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நேரடி மறைமுக வரி விகிதங்களை பட்ஜெட்டில் எளிமைப்படுத்த வேண்டும். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து அந்நிய நேரடி முதலீடுகளை உயர்த்தும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கான பெரும் நிறுவனம் எளிமைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் சர்வதேச வரிவிதிப்பு முறைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சலுகை வரி வரம்பையும் நீட்டிக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு வரி சலுகை அறிவிக்கப்பட வேண்டும். இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் செயல்படுத்துவதற்கான எளிமையான சூழலையும் உருவாக்க வேண்டும். நிலையான வரி விகிதங்கள் நிலவுவது உறுதி செய்திட வேண்டும். மேலும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான வரியை குறைப்பது மட்டுமல்லாமல், எக்ஸ்ரே கருவி மீதான வரியை 10 சதவீதத்திலிருந்து 7.5% குறைக்க வேண்டும். ஊட்டச்சத்து பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரையும் குறைக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க முதலீட்டாளர்கள் கூறியதாவது, புத்தக நிறுவனங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்தியாவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள நபர்கள் கூறிய போது, புத்தக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய புத்தக நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெற்றால் அதனை வரவேற்போம். மேலும் வெளிநாட்டு முதலீடுகளை எளிதில் ஈர்க்கும் விதமாக நடவடிக்கைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல் சர்வதேச உணவுப் பொருட்கள் விநியோக சங்கிலியில் இந்தியா முக்கிய பங்காற்று வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதியை எளிமைப்படுத்தும் விதமாக பட்ஜெட் இருந்தால் இந்திய தொழில் நிறுவனங்களின் போட்டி திறன் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.