ஐஐடி மாணவர்கள் தங்களின் அசாத்தியமான அறிவுத்திறனை வெறும் தொழில்நுட்பத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், அன்றாட வாழ்வியலிலும் வெளிப்படுத்தி வருவதைக் காண்கையில் வியப்பாக இருக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஐஐடி மாணவர்கள் சிலர் மரத்திலிருந்து கீழே விழுந்த மாங்காய்களை வீணாக்காமல், அவற்றைச் சேகரித்து மிக நேர்த்தியாக மாங்காய் ஊறுகாய் தயாரிப்பதைக் காண முடிகிறது.
மேலும் “படிப்பில் மட்டுமல்ல, சமையலிலும் நாங்கள் கில்லாடிகள்” என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் இந்த முயற்சி அமைந்துள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பயனர்கள், மாணவர்களின் இந்த பன்முகத் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இதனால் “படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கும் இவர்கள், வீட்டு வேலைகளிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும், “இவர்கள் உண்மையிலேயே அனைத்துத் துறைகளிலும் வல்லவர்கள் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கல்வியையும் வாழ்வியல் கலைகளையும் சமமாகப் போற்றும் இந்த மாணவர்களின் செயல் பலருக்கும் முன்மாதிரியாகவும், அதே சமயம் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது.
