அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் அசாமி்ல் பாஜக தனது ‘ஹாட்ரிக்’ சாதனையைப் பதிவு செய்துள்ளது. கூட்டணி அபார வெற்றி மொத்தம் 126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது. இதில் பாஜக மட்டும் தனித்து 82 தொகுதிகளைக் கைப்பற்றி தனது பலத்தை நிலைநாட்டியுள்ளது.
சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அசாம் மாநில பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒருமனதாக பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
மே 12-ல் பதவியேற்பு இதனைத் தொடர்ந்து, ஹிமந்த பிஸ்வா சர்மா வருகிற மே 12-ம் தேதி அசாம் மாநில முதல்வராகப் பதவியேற்க உள்ளார். அவர் இரண்டாவது முறையாக மாநிலத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் குவஹாத்தியில் நடைபெறவுள்ள இந்தப் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி * மத்திய அமைச்சர்கள் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் அசாம் மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
