தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், அரசு மரபுகள் மீறப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக எந்த ஒரு அரசு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பது நீண்டகால மரபு. ஆனால், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழை இப்படி மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயல் என்றும், இந்தத் தவறுக்கு யார் காரணம் என்பதைப் புதிய தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழின் பெருமையை நிலைநாட்ட வேண்டிய அரசு விழாவிலேயே இப்படி நடந்தது ஏற்கத்தக்கதல்ல எனப் பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
