திருத்தணி நகராட்சியில் உள்ள மேல் திருத்தணியில், 12-வது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி, காலை தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆறுமுக சாமி கோயிலுக்கு நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். இதனால் 2 கிராம் தங்க கம்மலை கழற்றி கொடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் மாணவிக்கு காயம் எற்பட்டத்தால் போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து  போலீசார் ஆறுமுக சாமி கோயிலின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவின் படங்களை ஆராய்ந்த போது மாணவி கம்மலை கழற்றி முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதனால் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பெற்றோருக்கு 4 பெண் குழந்தைகள் மூத்த மகள் என்பதால் நன்றாக படிக்க வேண்டும் என தொடர்ந்து பெற்றோர் தொந்தரவு கொடுத்தனர். படிக்க வில்லை என்றால் செத்துப் போ என கூறியுள்ளனர். இதனால் பெற்றோரை மிரட்டுவதற்காக மாணவி கம்மலை முட்புதரில் வீசிவிட்டு ஊசியால் கையில் கீறி கொண்டதாக மாணவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.