திருவள்ளூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், தமிழகத்திற்கு உரிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்கிய அவர், நாட்கள் கடந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதத்தில் இருந்த அவர், உடல் நிலை நலமின்றி காணப்பட்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி, எம்பி சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (செப்டம்பர் 2) முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். மாணவர்கள் நலனுக்காக தன்னைச் சமர்ப்பித்து உண்ணாவிரதம் இருந்த அவரது இந்த போராட்டம், தமிழகத்தில் கல்வி நிதிக்காக எழுந்துள்ள அரசியல் குரலாக அமைந்தது. தற்போது, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், எதிர்கட்சிகள் சார்பிலும் எதிரொலி காணப்படுவதாக கூறப்படுகிறது.
