சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 77800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9725 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 10609 ரூபாய்க்கும், ஒரு சவரன் 84872 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 137 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 137000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
