தமிழில் எலந்த பழம் பாடல் வாயிலாக பிரபலமான மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் மகனும் மூத்த தெலுங்கு நடிகருமான நரேஷ் கன்னட நடிகை பவித்ரா லோகேஷை அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த புகைப்படமும் வைரலாகியது. இந்த திருமணமானது ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சி எனவும் பேசினர்.

இதில் நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணமானவர். அதேபோல் பவித்ராவும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவர்.  இந்நிலையில் நரேஷ் மற்றும் பவித்ராவின் காதல் படமாக தயாராகிறது. இப்படத்துக்கு “மல்லி பெல்லி” என பெயர் வைத்துள்ளனர். எம்எஸ்.ராஜு இயக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.