இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தியாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் காலமானார். இந்தியா சார்பில் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய இவர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

2007-ல் நடந்த ஒரு முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். மேலும், ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ்  அணியிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.

விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பஞ்சாப் மாநில சீனியர் கிரிக்கெட் தேர்வுக் குழு உறுப்பினராகவும் தனது பங்களிப்பை வழங்கி வந்தார். இவரது மறைவுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் மற்றும் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

யுவராஜ் சிங் தனது பதிவில், “அமன்பிரீத் ஒரு அமைதியான மற்றும் கடின உழைப்பாளி” என்று நினைவுகூர்ந்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தனது சிறப்பான பந்துவீச்சால் கிரிக்கெட் வட்டாரத்தில் மதிக்கப்பட்ட ஒரு வீரராக அவர் திகழ்ந்தார்.

“>

 

30 ஆண்டுகளுக்கு மேலான கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்ட இவரது மரணம் பஞ்சாப் கிரிக்கெட் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.