சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், ஒரு சிறு குழந்தை கிருஷ்ண பக்தியில் திளைத்து ‘அச்யுதம் கேஷவம்’ என்ற புகழ்பெற்ற பஜனைப் பாடலைப் பாடி அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் மணிகர்ணிகா கடோச் என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தச் சிறுவன் கையில் பூஜை தட்டுடன் மிகுந்த பக்தியோடு இறைவனை வழிபடுவதைக் காணலாம்.
மேலும் மழலை மாறாத குரலில், வார்த்தைகள் முழுமையாக வராத போதிலும், அவன் காட்டிய அர்ப்பணிப்பும் உண்மையான பக்தியும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தக் காணொளி இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
இந்நிலையில் “பக்திக்கு வயது ஒரு தடையல்ல” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். “குட்டி கிருஷ்ண பக்தன்” என்றும், “இந்த மழலையின் பக்தி மனதை வருடுகிறது.
இதனையடுத்து பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். குழந்தையின் அந்தத் தூய்மையான புன்னகையும், கடவுள் மீதான அவனது மாறாத அன்பும் இணையவாசிகள் மத்தியில் இந்த வீடியோவை வேகமாகப் பரவச் செய்துள்ளது.
