பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலி  கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தனது மக்களவை எம்பி டேனிஷ் அலியை சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்ததாக மாயாவதி தலைமையிலான கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.