இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் அதிக அளவு மோசடிகள் நடைபெறுவதால் அரசு இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வங்கி வாடிக்கையாளருக்கு தெரியாமல் அவருடைய வங்கி கணக்கில் இருந்தும் பணம் எடுக்கப்பட்டு வருகிறது.

திடீரென்று உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக வரும் குறுஞ்செய்தியை கண்டு பலரும் அதிர்ச்சி அடைகிறார்கள். உங்களின் அனுமதி இல்லாமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக நீங்கள் உங்களுடைய வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக சைபர் கிரைம் போலீசில் உடனே புகார் அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் மூலம் நடைபெறும் இணைய மோசடி பக்கத்திலும் நீங்கள் புகார் அளிக்கலாம். அதனைப் போலவே எஃப் ஐ ஆர் பதிவு செய்து நுகர்வோர் நீதிமன்றத்தை நீங்கள் அணுகலாம்.