மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றிற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலிநிவாரணி மெஃப்டலின் பாதகமான பக்கவிளைவுகளைக் கண்காணிக்க சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அறிவுறுத்தும் மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை இந்திய மருந்தக ஆணையம் வெளியிட்டுள்ளது. முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி ஆகியவற்றின் சிகிச்சையில் மெஃபெனாமிக் அமில வலி நிவாரணி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்து உட்கொண்டு பக்கவிளைவு ஏற்பட்டால், www.ipc.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1800-180-3024 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.