மாநிலத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு பள்ளியில் பணியாற்றுவதை தடுப்பதற்காகவும் பள்ளி மாணவர்கள் மாற்று சான்றிதழில் போலியாவணங்களை பயன்படுத்துவதை தடுக்கவும் உத்தரகாண்ட் மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி 9 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆதார் அட்டை போன்று மாணவர்களுக்கு நிரந்தர கல்வி எண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் யு டி ஏ ஒய் எஸ் போர்டல் புதுப்பிக்கப்பட்ட பிறகு ஒன்றாம் வகுப்பில் இருந்து மாணவர்கள் அனைவருக்கும் நிரந்தர கல்வி எண் வழங்கப்பட உள்ளது.

இது அவர்களின் 12ம் வகுப்பு முடிக்கும் வரை செல்லுபடியாகும். அதேசமயம் மாணவர்கள் போலிச் சான்றிதழ் உபயோகத்தில் இருந்து காப்பதற்காக நிரந்தர கல்வியின் அடிப்படையில் மட்டுமே டிசி வழங்கப்படும். பள்ளி மற்றும் ஆசிரியர்களின் அனைத்து தகவல்கள் இதில் பதிவு செய்யப்படும். இதில் ஆசிரியர்கள் தரவுகளை பதிவேற்றிய பின்னர் ஒரு ஆசிரியர் ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற முடியும். மாணவர்களின் அனைத்து தகவல்களும் பள்ளியிலேயே இதன் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.