இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு எந்த அளவுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதோ அதனைப் போலவே வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதனால் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு என இரண்டையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் பெரும்பாலானோர் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதற்கு அரசு கூடுதல் கால அவகாசத்தை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் புதிதாக சொத்து வாங்குபவர்களுக்கு மத்திய அரசு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்காமல் வைத்திருந்தால் ஒரு சதவீதம் டிடிஎஸ்க்கு பதிலாக 20% செலுத்த வேண்டும் என்று சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி சட்டத்தின்படி ஐடிஐ தாக்கல் செய்யும்போது பான் கார்டுடன் ஆதார் இணைப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் அதன் பிறகு ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும் பெரும்பாலானோர் அலட்சியம் காட்டியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.