பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் இந்த திட்டத்தின் மூலமாக 14 ஆயிரம் கோடி நிதி உதவி விவசாயிகள் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் 15வது தவணைக்கான பணம் ந்த மாதத்தில் இருதியில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
இந்நிலையில் இதன் குறை தீர்ப்பு முகாம் ஜன., 15வரை வட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. பணம் கிடைக்காத விவசாயிகள் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு கிராம நோடல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
